திங்கள், 30 டிசம்பர், 2013

மனப் போராட்டம்

ஆயிரம் ஆயிரம் தோல்விகள்
ஒரு வெற்றியால் மறைந்துவிடும்
நம்  ஆசையின் அடங்காத
நிர்பந்தம் நம்மை தோல்வியில் அழுத்தும்

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி
நம்மை நம் வாழ்க்கை
முறையை தெளிவுபடுத்த
ஒவ்வொரு மனிதமும் புதுப் புது
நிகழ்வில் அவர்களின்
 வெவ்வேறு பரிமாணத்தில்
கற்றுக்கொள்ள
மனிதம் ஒவ்வொரு முறையும்
ஒருநிலை
படுத்தபடுகிறது

 மனித மனம் ஒவ்வொரு
வலியிலும் கற்றுகொள்ளும்
பாடம் அவர்களை
பன்படுத்துகிறது

ஒவ்வொரு முறையும்
என் மனப்போராட்டமும்
என் வாழ்வை
பன்படுத்துகிறது.
வலியையும், மகிழ்ச்சியையும்
 பார்க்க பழகிவிட்டேன் 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சொந்த கதை என் சோகக் கதை

சொந்த கதை என் சோகக் கதை
என் நெஞ்சுக்குள்ள வச்சி தச்ச கதை
என் அன்புக்  கதை என் ஆசைக்  கதை
என் வாசலுக்கு வந்து நின்ன கதை

என் சொந்தமா வந்து நின்ன ஆசை கதடா
நான் ஆசைப்பட்டு சேத்துகிட்ட சொந்த கதைடா
அன்புக்கும் ஆசைக்கும் நடந்த கதைடா
நா ஆசையா மனசுக்குள்ள வச்ச கதைடா
அவள மறக்கமுடியாம தவிச்ச  கதைடா

சொந்த கதை என் சோகக் கதை
என் நெஞ்சுக்குள்ள வச்சி தச்ச கதை
என் அன்புக்  கதை என் ஆசைக்  கதை
என் வாசலுக்கு வந்து நின்ன கதை

இன்னொரு பிறவிய நா மறுத்த கதைடா
என் என்னங்கள அவளுக்குள்ள திணிச்ச கதைடா
அவள போல இங்க யாருமில்லையே
ஆனாலும் என் மனசு தவிக்கிதிங்கே
எப்படியோ என் வாழ்க்கை முடிஞ்சாலும்
அவள சேர மனம் துடிக்கிற என் சொந்த கதைடா